Aanlyn Bybel

- Advertensies -




எரேமியா 15:15 - பரிசுத்த பைபிள்

15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர். என்னை நினைவில் வைத்துள்ளீர். என்னை கவனித்துக்கொள்வீர். ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும். நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர். நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால் என்னை அழித்து விடாதேயும். என்னை நினைத்துப் பாரும். கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 யெகோவாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு எனக்காக நீதியைச் செய்யும்; உம்முடைய நீடிய பொறுமையினால் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய காரணமாக நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 யெகோவாவே! நீர் என்னை அறிந்திருக்கிறீர். என்னை நினைவுகூர்ந்து என்னை ஆதரியும். என்னைத் துன்பப்படுத்தியவர்களை பழிவாங்கும். நீர் நீடிய பொறுமையுடையவர். நீர் என்னை எடுத்துப்போடாதேயும். உமக்காக நான் எவ்வளவு நிந்தையைச் சகித்தேன் என்பதையும் நினைத்துப் பாரும்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.

Sien die hoofstuk Kopieer




எரேமியா 15:15

Volg ons:

Advertensies


Advertensies