எபிரெயர் 1:5 - பரிசுத்த பைபிள்5 கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை, “நீர் எனது குமாரன், இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.” அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை, “நான் அவரது பிதாவாக இருப்பேன். அவர் எனது குமாரனாக இருப்பார்.” Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 எப்படியென்றால், நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன், அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா? Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஏனெனில் இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது இவ்வாறு சொல்லியிருக்கிறாரா? “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்” அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன்; அவர் என்னுடைய மகனாயிருப்பார்.” Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஏனெனில் இறைவன் தூதர்களில் யாரையாவது பார்த்து, “நீர் என்னுடைய மகன், இன்று நான் உமக்குத் தந்தையானேன்” என்று எப்பொழுதாவது சொல்லியிருக்கின்றாரா? அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன், அவர் என்னுடைய மகனாயிருப்பார்” என்று சொல்லியிருக்கின்றாரா? Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? Sien die hoofstuk |