எண்ணாகமம் 18:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 யெகோவாவுக்காக கொண்டுவரப்படும் கர்ப்பத்தின் முதற்பேறான பிள்ளையும், மிருகமும் உன்னுடையவைகளே. ஆனால் ஒவ்வொரு முதற்பேறான மகனையும், அசுத்தமான மிருகங்களின் ஆண் தலையீற்றையும் நீ மீட்கவேண்டும். Sien die hoofstukபரிசுத்த பைபிள்15 “ஒரு பெண்ணின் முதல் குழந்தையும் ஒரு மிருகத்தின் முதல் குட்டியும் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விலங்கின் முதலீற்று தீட்டுள்ளதாக இருந்தால் கொடுப்பவரே அதைத் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் பிறந்த குழந்தை காணிக்கையாகக் கொடுக்கப்படும்போது அதுவும் திரும்ப வாங்கப்பட வேண்டும். அப்பொழுது அக்குழந்தை மறுபடியும் அதே குடும்பத்திற்கு உரியதாகிவிடும். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும். Sien die hoofstuk |